Tuesday, 7 February 2017

லவ் ஒ Love O Cool Drinks



நம்ம ஊரு குளிர்பானம் (Love O)லவ்-ஒ தான் என்றுமே பெஸ்ட்...!
நம்முடைய நிலத்தடி நீரையே உறிஞ்சி,நம் வாழ்வதாரங்களையே அழித்து, பகட்டான விளம்பரங்கள் மூலம்
இந்திய குளிர்பான சந்தையை கைப்பற்றி பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கின்றன வெளி நாட்டு குளிர்பான கம்பெனிகள்..!
ஆனால் நம்ம ஊரு குளிர்பானங்களான லவ் ஒ, பன்னீர் சோடா,கலர் கோலி சோடா, இவை நம் ஆரோக்யத்துக்கு ,இனிப்பானவை,இனிமையானவை, தாகம் தணிப்பவை, மனதுக்கு மகிழ்ச்சி தருபவை, குளிர்சாதன வசதி இல்லாத காலங்களிலேயே தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்து ஜில் லென விற்பனை செய்யப்பட்டவை...!
லவ்-ஒ வை சாவி போட்டு திறப்பதும் ,கோலி சோடவை கட்டை விரலால் உடைப்பதும் தனி சுகம் அல்லவா?
தமிழக கிராமம், நகரமெங்கும் மக்கள் விரும்பி வாங்கி அருந்திய இந்த குளிர பானங்கள், இந்த பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் திணறுகின்றன...!
அவற்றை தூக்கி நிறுத்த வேண்டியது நம் கடமை..!
வயிற்று வலிக்கு ஒரு லவ்ஒ வாங்கி குடித்தால் சரியாகி விடும்..!
வெளிநாட்டு குளிர்பானங்கள் குடித்தால். வயிற்று வலி தான் வரும்..!
மீண்டும் பட்டி தொட்டி எங்கும் லவ்ஓ விற்பனையாகும் காலம் வர வேண்டும்..!
நம்ம ஊரு குளிர்பானங்கள் குடிப்பதே உயர்வானது என்ற எண்ணம் பெருக வேண்டும்..!
விருந்தினர்களுக்கும் லவ்ஒ ,பானங்கள் வாங்கி உபசரித்த காலம் மீண்டும் வர வேண்டும்...!
அதற்காக   நாம் நம் ஆதரவை
லவ் ஒ இவைகளுக்கு வழங்குவோம்..!
இன்றும் நான் லவ் ஒ மட்டும் தான் குடிப்பேன் சொல்லுபவர்களை காண முடிகிறது..!
எனவே என்றும்
நம்ம ஊர் சிறுதொழில்கள் வளர
உடலுக்கு நலம் தரும் நம்ம ஊரு லவ்ஒ ,கோலி சோடக்களை வாங்கி பருகுவோம்..!
நன்றி..By Love You Cool Drinks

No comments:

Post a Comment